சத்தீஸ்கரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல். இச்சிறுவன் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்தான். இதையடுத்து, தேசிய மீட்புப் படையினர், ராணுவம், காவல் துறையினர் உள்பட 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிறுவனை மீட்பதற்காக ஆழ்துளைக் கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, 108 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர், உடனடியாக சிறுவனை பிலாஸ்பூரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனுக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் லேசான காய்ச்சல் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் கடந்த மூன்று நாட்களாக ஆழ்துளைக் கிணற்றில் இருந்ததால் அவனுக்கு செப்சிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.