U20 உலக ரெஸ்ட்லிங் சாம்பியன்ஷிப் போட்டி : 16 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

U20 உலக ரெஸ்ட்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் 16 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளனர்.   பல்கேரியாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரெஸ்ட்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள், வீராங்கனைகள்…

U20 உலக ரெஸ்ட்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் 16 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளனர்.

 

பல்கேரியாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரெஸ்ட்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில், மகளிர் பிரிவில் 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலமும், ஆடவர் பிரீஸ்டையில் பிரிவில் 1 வெள்ளி, 6 வெண்கலமும், ஆடவர் கிரேக்க ரோமன் பிரிவில் 2 வெண்கலமும் இந்திய அணி வீரர்கள் வென்றுள்ளனர்.

 

ரெஸ்ட்லிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற அண்டிம் பங்கல், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண்மணி என்ற சாதனை படைத்துள்ளார். இந்த தொடரில் மகளிர் அணி 2 ஆம் இடமும், ஆடவர் அணி 3 ஆம் இடமும் பெற்று நிறைவு செய்திருக்கிறது.

2001- ஆம் ஆண்டு இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் மட்டுமே வென்றது. அதே சமையம் நடப்பாண்டில் இந்திய வீரர்கள் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்தியதன் விளைவாக 16 பதக்கங்களை குவித்திருப்பது, இந்தியாவில் மல்யுத்தம் விளையாட்டின் வளர்ச்சியை குறிக்கிறது என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.