19 வயது உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் ஹராரேயில் இன்று அரங்கேறும் இரண்டாவது அரை இறுதியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு மோதுகின்றது.
போட்டியில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் 5 தொடர் வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி லீக்கில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தான்சானியாவையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் அயர்லாந்தையும் வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 2-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது.







