படத்தின் போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் சிலையையும் மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருப்பது போல உருவாக்கப்பட்டிருந்தது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இவையிரண்டும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
‘#Vanangaan’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் | ரிலீஸ் எப்போது தெரியுமா?
‘வணங்கான்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண்…
‘வணங்கான்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹர்ப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குநர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.






