‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புது திரைப்படம் ’கர’. ஐசரி கே.கணேஷ், தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் தணிக்கை வாரியம் ‘கர’ படத்திற்கு ‘யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.








