சீனாவில் ஏற்பட்ட ஹைகுய் புயல்; கடலோர மாகாணங்களில் கடும் சேதம்…

சீனாவில் ஏற்பட்ட ஹைகுய் புயலால், கடலோர மாகாணங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. 3 நாட்களுக்கு முன்பு தைவானில் கரையை கடந்த ஹைகுய் சூறாவளிப்புயல், சீனாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள ஃபுஜியான் மற்றும் கவுகாங்டாக் மாகாணங்களில்…

சீனாவில் ஏற்பட்ட ஹைகுய் புயலால், கடலோர மாகாணங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

3 நாட்களுக்கு முன்பு தைவானில் கரையை கடந்த ஹைகுய் சூறாவளிப்புயல், சீனாவின் தென் கிழக்கில் அமைந்துள்ள ஃபுஜியான் மற்றும் கவுகாங்டாக் மாகாணங்களில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. புயல் காரணமாக கனமழை தொடர்வதால் தார் சாலைகள், தற்போது காட்டாறுகளாக மாறியுள்ளன.

வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் ஓடும் வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். பல இடங்களில் பெரும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.