பட்டாசு வெடித்து சிதறி வீடு தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து தரைமட்டமானது. 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நேருஜி நகர் பகுதியில் வசித்து…

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து தரைமட்டமானது. 2 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நேருஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமநாதன். இவர் தனது வீட்டில் பட்டாசு குழாய் தயாரிக்கும்  கம்பெனி நடத்தி வருகிறார்.

இங்கு சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக பேன்சி ரக பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் வீடு இடிந்து தரைமட்டமானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். 6 பேர் அந்த வீட்டில் பணி புரிந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில்  2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய  2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்..

இந்த திடீர் விபத்துச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.