’காத்துவாக்குல…’ படத்தில் இதுதான் நயன்தாரா கேரக்டர் பெயர்!

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில், நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்துடன், நயன்தாரா நடித்த ’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர், அட்லீ…

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில், நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்துடன், நயன்தாரா நடித்த ’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர், அட்லீ இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கானுடன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முன்பு, தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. காதல் கதையான இதில், விஜய் சேதுபதி ஹீரோ. நடிகை சமந்தா இன்னொரு ஹீரோயின்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விக்னேஷ் சிவனுடன் இணைந்து லலித்குமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஷுட்டிங் ஐதராபாத், சென்னையில் நடந்து முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய அப்டேட்டை இன்று வெளியிட இருப்பதாக படக்குழு நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் லுக்கை படக்குழு இன்று காலை வெளியிட்டது.

அதில், அவர் பெயர் ராம்போ என்றும் அதற்கு ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊந்திரன் என்று விரிவாக்கமும் குறிப்பிடப் பட்டுள்ளது. படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பும் வெளியானது.

பிறகு நடிகை சமந்தாவின் லுக் வெளியிடப்பட்டது. அவர் பெயர் கதீஜா என்று வெளியிடப்பட்டுள்ளது. மாலையில் நடிகை நயன்தாராவின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அவர் கண்மணி என்ற பெயரில் படத்தில் நடிக்கிறார். இதை பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.