முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மனு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான புகார் மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இறந்த பிறகு 6 மாத காலத்துக்குள் தேர்தல் நடத்தலாம் என்ற விதி இருக்கிறது. ஆனால் அவசர அவசரமாக 15 நாட்களுக்குள் தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக சரி பார்க்கவில்லை. இந்த தேர்தலை முறையாக நடத்தலாம் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாநில தேர்தல் ஆணையம்தான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி சொல்லப்பட்டதாக தெரியவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் பட்டியலை பூத் வாரியாக ஆராய்ந்த போது மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நான்கில் ஒரு பகுதி அதாவது 50 ஆயிரம் வாக்காளர்கள் அந்த குறிப்பிட்ட குடியிருப்பில் இல்லை.மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில்தான் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் நடத்தக்கூடிய அலுவலர்தான் வாக்காளர் பட்டியலையும் தயாரித்து இருக்கிறார். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

ஆளும் திமுக சொல்வதை செய்கின்றவர்களாக தேர்தல் அலுவலர்கள் உள்ளனர். நேர்மையாக இந்தத் தேர்தல் நடைபெறாது. நியாயமாக தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் வாக்காளர் பட்டியல் சரி பார்க்க வேண்டும் . முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கக்கூடாது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளோம்.

ஆளும் திமுக அரசு காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி வருகிறது. மத்திய படை தலைமையில் இந்த தேர்தலை நடத்த வேண்டும். முறையான வாக்காளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

இடைத்தேர்தலுக்காக யாரையும் எதிர்பார்த்து அதிமுக காத்திருக்கவில்லை. எங்கள் இயக்கம் மாபெரும் இயக்கம். வேட்பாளாரை அறிவித்து தீவிரமாக எடப்பாடி பழனிசாமி பணியாற்றுகிறார். அனைத்து இந்திய அண்ணா திராவிட கட்சி யாருக்காகவும் காத்திருக்காது. இவ்வாறு சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா?

G SaravanaKumar

’தொரட்டி’ படத்தின் கதாநாயகர் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழப்பு!

Vandhana

’ஜி.பி.முத்து விரைவில் கட்சி தொடங்க உள்ளார்’ – நடிகர் சதீஷ்

G SaravanaKumar