தஞ்சை மருத்துவமனை நுழைவாயில் சிமெண்ட் காரை பெயர்ந்து
விழுந்ததில், நோயாளியின் உறவினர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நான்காவது வார்டு மிகவும் பழுதைடைந்து நிலையில் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், புதிதாக இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, டெல்டா மாவட்டங்களிலிருந்து வரும் நோயாளிகளுக்கு பெரும்பாலும் பழைய கட்டித்திலேயே மருத்துவம் பார்க்கப்படிகிறது.இதன் நுழைவாயில் பகுதியில் உள்ள பழமையான கட்டிடத்தில் நோயாளியின் உறவினர்கள் படுத்திருந்த நிலையில், திடீரென பெயர்ந்த மேற்கூரை அவர்களின் மேலே விழுந்துள்ளது.
இதனால், நோயாளிகளின் உறவினர்கள் கார்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரண்டு பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-கு. பாலமுருகன்







