அமெரிக்க அதிபரின் சா்வதேச வா்த்தக ஆலோசனைக் குழுவில் இரு இந்திய அமெரிக்கா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வா்த்தக ஆலோசனைக் குழுக்கான புதிய நபா்களின் விவரங்களை வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெலாய்ட் கன்சல்டிங் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான புனித் ரஞ்சன், ஃபெட்எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ராஜேஷ் சுப்ரமணியம் ஆகிய இந்திய அமெரிக்கா்கள் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதையும் படிக்க: பிபிசி விவகாரம்: ஜெய்சங்கரிடம் முறையிட்ட இங்கிலாந்து அமைச்சர்
மனை வணிகம், தொழில் நிறுவனங்கள், தொழிலாளா் துறை, தேசியப் பாதுகாப்பு, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் அக்குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். 25-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவுக்கு கேஸ்ல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவரான மாா்க் எட்வின் தலைமைப் பொறுப்பை வகிக்கவுள்ளாா்.
அமெரிக்காவின் சா்வதேச வா்த்தக செயல்பாட்டை அதிகரிப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது, வா்த்தகம் சாா்ந்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது குறித்து அதிபருக்கு இந்தக் குழு ஆலோசனை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








