முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,578 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 1,578 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 66 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 607 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26 லட்சத்து 14 ஆயிரத்து 291 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 188 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 204 பேர், கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோவையில் 163 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 107 பேருக்கும், ஈரோட்டில் 95 பேருக்கும் தஞ்சாவூரில் 94 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மும்பையில் தடுப்பூசிக்கு தட்டுபாடு: மூடப்படும் தடுப்பூசி மையங்கள்!

Gayathri Venkatesan

பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் என்ன?

Jeba Arul Robinson

நீட் தேர்வில் வெற்றிபெற்று மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்றிய கிராமப்புற மாணவி!

Jeba Arul Robinson