மணப்பெண் ஒருவர் திருமண மேடையில் இருந்து திடீரென குத்தித்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் காண்போம்.
மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தின் உம்ரேத் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணப்பெண்ணும் இளைஞர் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளக காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவரைக் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
உள்ளூர் பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் படி, சம்பவத்தன்று மாலையில் ஊர்வலம் முடிந்து மணமேடையில் மணமகன் இருந்துள்ளார். மணப்பெண்ணின் காதலனும் அந்த திருமணத்திற்கு வந்துள்ளார். மாலை மாற்றும் சடங்கிற்காக அவர் கையில் மாலையுடன் மணப்பெண்ணுக்காக காத்திருந்துள்ளார். மேடையில் மாலையுடன் மணப்பெண் கூட்டத்தில் தனது காதலனை கண்டு உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்த மணப்பெண் திடீரென மேடையில் இருந்து குதித்து தனது காதலனை நோக்கி சென்றுள்ளார். காதலனை அடைந்த அவர், கட்டிப்பிடித்து மாலையை அவர் கழுத்தில் அணிவித்துள்ளார். இது மணமகன் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
MP: Shocking incident from Chhindwara: Bride ran from the stage, put a garland around her lover’s neck in front of the groom… A shocking wedding incident has come to light from #Chhindwara, #MadhyaPradesh, which has surprised everyone. pic.twitter.com/yHvMGKzHN1
— Siraj Noorani (@sirajnoorani) May 1, 2026
தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் மணப்பெண்ணின் காதலரை தாக்கி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அதே நேரம் அதிர்ச்சிக்குளளான மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
திருமணம் ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சல் மற்றும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மணமகனின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறை தற்போது இவ்விவகாரம் குறித்து விசாரித்து வருகிறது.
இந்த வீடியோ தொடர்பான கமெண்டுகளில் சிலர் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டுகின்றனர். அதே நேரம் சிலர் மணமகனை எண்ணியும் வருத்தும் தெரிவிக்கின்றனர். கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்ற மணப்பெண்ணி குடும்பத்தினரும் கமெண்டுகளில் விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.







