முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம் Instagram News

நீங்களும் Facebook புளூடிக் வாங்கலாம்; எப்படி?

உங்கள் Facebook கணக்கை எவ்வாறு வெரிஃபைடு பெறுவது என்பதை இந்த தொகுப்பில் படிப்படியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளுக்கு உரிய ஆவணங்களை செலுத்தி அதன் பயனாளர்கள்  ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒருவருடைய  அதிகாரப்பூர்வ  கணக்கு இதுதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, பெயருக்கு அருகில் புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன்பு உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.  இதனையடுத்து அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக ட்விட்டர் பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து ட்விட்டர் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், எலான் மஸ்க் ட்விட்டரில், ட்விட்டர் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ட்விட்டர் பயனர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பர்க் புளுடிக் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் மெட்டா ஃவெரிபைடு தொடர்பாக சாதரன இணையதளத்திற்கு மாதம் 992 ரூபாயும் (11.99 அமெரிக்க டாலர் ),  iOS எனப்படும் ஆப்பிள் நிறுவன தளத்திற்கு மாதம் 1240 ரூபாயும் (14.99 அமெரிக்க டாலர்) வசூலிக்கபடும். இந்த வாரத்தில்  ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இந்த சேவையை அறிமுகப்படுத்துகிறோம். விரைவில் பல நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

உங்கள் Facebook மற்றும் Instagram கணக்குகளை எவ்வாறு வெரிஃபைடு பெறுவது என்பதை இந்த தொகுப்பில் படிப்படியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook கணக்குகளுக்கான வெரிஃபைடு பெறும் செயல்முறை:

1. உங்கள் Facebook கணக்கு அமைப்புகளுக்குச் சென்று “பொது” விருப்பத்தை கிளிக் செய்யவும்.

2. “பக்க சரிபார்ப்பு” என்பதைக் கிளிக் செய்து, “இந்தப் பக்கத்தைச் சரிபார்க்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.

3. தொலைபேசி அல்லது ஆவணங்கள் மூலம் உங்களுக்குப் பொருத்தமான சரிபார்ப்பு முறையைத் தேர்வுசெய்யவும்.

4. தேவையான விவரங்களை உள்ளிட்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.

5. உங்கள் விண்ணப்பத்தை Facebook மதிப்பாய்வு செய்யும் வரை காத்திருங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருமணம் செய்ய மறுப்பு: இளைஞர் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் அம்மா

Halley Karthik

காவல்துறை விசாரணையில் விஜய நகர பேரரசு சிலைகள் கண்டுபிடிப்பா ?

Web Editor

எதிர்க்கட்சிகள் அமளி: 4-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

Gayathri Venkatesan