பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தவெக சார்பில் இன்று பாராட்டு விழா!

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று நாளை விருது வழங்கி கவுரவிக்கிறார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை நீலாங்கரையில் நடக்கும் நிகழ்ச்சியில் த.வெ.க. சார்பில் முதலமைச்சர் விஜய் பாராட்டி கவுரவிக்க உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள், ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு முதல் கட்டமாக இன்று (04.11.2026. புதன்கிழமை), சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பின்வரும் மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் கலந்துகொள்கிறார்கள்.

இம்மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் நாளை காலை 11.00 மணிக்கு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. பின்னர் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது. எதிர்காலச் சமுதாயம் வளமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனிக் கவனம் செலுத்திச் செயலாற்றி வருகிறார். இன்று மதியம் 2.00 மணி அளவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர். முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்கு. அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி, வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.