29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – அருணா ஜெகதீசன் ஆணையம் சொல்வதென்ன?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டுள்ள சில முக்கிய குறிப்புகளை தற்போது பார்க்கலாம்..

 

  • கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கி உள்ளனர்.
  • போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
  • ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
  • ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர்.
  • கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை.
  • கலவரம் நடந்து கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் ஊரிலேயே இல்லை.
  • தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது காட்டில் வேட்டையாடுவதுபோல் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டிருக்கிறார்.
  • சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்துகொண்டதால் அப்படி சுட வேண்டும் என்ற எண்ணம் சுடலைக்கண்ணுவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
  • புத்திசுவாதீனம் இல்லாதவர் போல் இப்படி நடந்துகொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத்தக்கதல்ல.
  • துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 3 வருவாய்த்துறை அலுவலர்கள், 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இறந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading