ஐஐடி, ஐஐஎம்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்-வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஐஐடி, ஐஐஎம்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பவர்…

ஐஐடி, ஐஐஎம்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான இருப்பிடச் சான்று, IIT, IIM, IISC, AIIMS ஆகியவற்றில் சேர நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு மதிப்பெண், சேர்க்கை ஆணை, Bonafide Certificate, சார்ந்த கல்வி நிறுவனத்தின் கட்டண விவரம் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட மாணவர்கள், சார்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

சான்றிதழ்களை ஆய்வு செய்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும். தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அனைத்து மாணவர்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்து தேவைப்படும் நிதி குறித்த பட்டியலை அரசுக்கு அனுப்பிட வேண்டும்.

அரசுப் பட்டியலை சரிபார்த்து, 4 ஆண்டுகளுக்கு ஆகும் செலவு அனைத்தையும் மொத்தமாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு விடுவிக்கும்.

அதன்படி மாணவரின் வங்கிக் கணக்குக்கே ஒவ்வோர் ஆண்டும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நிதியை பிரித்து வழங்கும் என்று வழிகாட்டுதல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.