பேருந்தில் தவறாக நடக்க முயன்ற போதை ஆசாமிக்கு அடி உதை; பெண் ஆவேசம்

நெல்லை அருகே பேருந்தில் மதுபோதையில் தவறாக நடக்க முயன்றவர் மீது பெண் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில்…

நெல்லை அருகே பேருந்தில் மதுபோதையில் தவறாக நடக்க முயன்றவர் மீது பெண் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறிய அவர், அங்கிருந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்தில் வைத்தே மணிகண்டனை அந்த பெண் கடுமையாக தாக்கியுள்ளார். இதைப்பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தவும் சக பயணிகள் அவரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மணிகண்டனை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.

இருப்பினும் ஆத்திரம் குறையாத அந்த பெண் போலீசார் கண்முன்னே மணிகண்டன் மீது தாக்குதல் நடத்தினார். உடனடியாக அங்கிருந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மணிகண்டன் அதிக மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.