முக்கியச் செய்திகள் தமிழகம்

டெல்லி திமுக அலுவலகம்; திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அண்ணா – கலைஞர் அறிவாலயத்தில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவ்விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிகழ்வுக்கு வந்திருந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். இதனையடுத்து அண்ணா – கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி மாறன் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனையடுத்து விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய KARUNANITHI A LIFE புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், பொருளாதார அறிஞரும் தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவருமான ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய A DRAVIDIAN JOURNEY புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அண்ணா – கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் நூலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

Advertisement:
SHARE

Related posts

அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ரா உடல் தகனம்!

Halley Karthik

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: மாணவி மனு

Ezhilarasan

மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்தது தவிர்க்கவியலாதது: ராணுவ தளபதி

Jayapriya