தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) தெளிவான பிரிவுகளோ, உரிய தேர்வுப் பட்டியலோ இல்லாமல் நடத்துவது சமூக நீதியை திட்டமிட்டே குழிதோண்டிப் புதைக்கும் செயல்!
தெலங்கானா மாடலைப் பின்பற்றி முறையான பட்டியலுடன் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இப்பணி தொடங்குவதற்கு முன்பே 09.08.2026 அன்று நான் கடிதம் மூலம் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அரசு அதை அலட்சியப்படுத்தியது ஏன்?
மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகத்தை நிறுத்துங்கள். சுய விளம்பர அரசியலை விட்டுவிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ஏற்று உடனடியாக கேள்விப் படிவத்தை மாற்றி அமையுங்கள்!
உண்மையான நாட்டு வளர்ச்சி என்பது சமூக நீதியின் மீதுதான் கட்டமைக்கப்பட வேண்டும்; சுயநலத்தின் மீது அல்ல”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




