சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகைள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலுரை வழங்கினார். அப்போது பேசியவர், “குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மக்களுக்கு நன்றி. 104 நிறுவனங்களுடன் MOU ஏற்பட்டுள்ளது. 25 புதிய நிறுவனங்கள் வந்துள்ளன. தற்போதுள்ள ஒப்பந்தங்கள் எல்லாம் டிரைலர்தான். முதலீட்டார்கள் வருவதற்கு காரணம் லஞ்சம் இல்லை என்பதுதான்.
அந்நிய முதலீடு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஜவுளித்துறையில் 16 திட்டங்கள். 58 சிப்காட் பூங்காவில் 8-ல் தண்ணீர் வசதி இல்லை. ஓசூரில் விமான நிலையம் அமைக்க முயற்சி. கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்.
மனைகள் தொடர்பாக டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். விபத்துகளை தடுக்க டிஜிட்டல் கண்காணிப்பு. செமிகண்டக்டர் துறையில் ஊக்கத்தொகை திட்டம். வெற்றி மகளிர் மேம்பாட்டுத் திட்டம். உப்பள தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணம் 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




