சமூக வலைதளமான ட்விட்டரை பயன்படுத்துவதில் இன்று காலை முதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.
இன்றைய நவீன உலகில் அனைவரும் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் நிலையில் உள்ளோம். அதிலும் இளைஞர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை சமூக வலை தளங்களில் தான் செலவிடுகின்றனர். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைதலங்கள் உள்ளன.
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் உபயோகிக்கும் சமூக வலைதளமாக ட்விட்டர்உள்ளது. இதனை கிட்டத்தட்ட 30 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். அதன்பின் அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை முதல் வலைதளங்களில் ட்விட்டர் கணக்கை லாகிங் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயனர் பெயர் மற்றும் கடவு எண்ணை உள்ளீடு செய்யும் போது எரர் வருவதால் ட்விட்டரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் சமூக வலைதளங்களை உபயோகிப்போர் கடும் அவதியடைந்துள்ளனர். பயனரிகளின் புகாரை தொடர்ந்து சிக்கலை சரி செய்யும் பணியில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.







