34.5 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட11 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தாம்பரத்தில் இருந்து ஜன. 12-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06021) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து ஜன.13-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (06022) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து ஜன.13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06041) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து ஜன.16-ம் தேதி மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில்(06042) புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்த டையும்.

இதுதவிர, கொச்சுவேலி-தாம்பரம்(06044-06043), எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல் (06046-06045), தாம்பரம்-திருநெல்வேலி (06057-06058) ஆகிய 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (டிச.29) காலை 8 மணிக்கு தொடங்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading