முக்கியச் செய்திகள் சினிமா

கொரோனாவில் இருந்து மீண்டார் ‘த்ரிஷா’

கொரோனாவிலிருந்து மீண்டதாக நடிகை ‘த்ரிஷா‘ டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மீண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில், திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது அவர் தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

இதுகுறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில், ‘நெகட்டிவ்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் மகிழ்ச்சியடைந்ததே இல்லை. ஆனால், தற்போது முதன் முதலாக மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. தற்போது, நான் 2022-இல் இயங்க நான் தயாராகிவிட்டேன் என்று நடிகை த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

எனக்கும் பிராவோவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும்: தோனி

Ezhilarasan

திருச்செந்தூர் கோயில் வசதிகள் மேம்படுத்தப்படும்; அமைச்சர்

Saravana Kumar

கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!

Jayapriya