மதுரையில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து பாம்புகள், எலிகளோடு பழங்குடி இன மக்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து பழங்குடியின மக்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்படத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை, துயரங்களை சிறப்பாக காட்சிப்படுத்தி நடித்ததாக நடிகர் சூர்யாவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிக்கு நன்றி தெரிவித்தும், பழங்குடி மக்களுக்காக வாதாடி வெற்றி பெற்ற நீதியரசர் சந்துரு ஆகியோருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தும் அவர்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே நேரத்தில், ஜெய்பீம் படத்திற்கு எதிராக சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். ஜெய்பீம் படத்தை தடை செய்து, நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகர் சூர்யாவின் படத்தை தமிழ்நாட்டில் எங்குமே திரையிட முடியாது எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.