கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளை அடைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சரக்கு வாகன போக்குவரத்துக்கும், பெட்ரோல் பங்குகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் மின்னணு முறையில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று உணவு விநியோகம் செய்யவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
‘டாஸ்மாக்’ கடைகளுக்கும், மதுபான கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும், அந்த நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களை காண்பித்துவிட்டு பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








