திருச்சி விமானத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்…

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தடைந்தது. இதில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான பயணி ஒருவரிடம் சோதனை செய்ததில் உடலில் பேஸ்ட் வடிவில் மறைத்து  எடுத்துவரப்பட்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

நூதன முறையில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தின் எடை என்பது 161 கிராம் எனவும் அதன் சந்தை மதிப்பு 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என திருச்சி சர்வதேச விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சே.அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.