மயிலாடுதுறை அருகே மழையின் காரணமாக சாலையோரம் இருந்த மரத்தின் கிளைகள் திடீரென விழுந்ததால் காரின் மேற்பகுதி சேதம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனிடையே பூம்புகாரில் இருந்து கல்லணை செல்லும் பிரதான சாலையான அப்பாசாவடி பகுதியில் சாலையோரம் இருந்த பட்டுப்போன பழமையான புளிய மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்துள்ளது.
சாலையின் குறுக்கே விழுந்த மரக்கிளைகளால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் செந்தில் என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது கிளைகள் விழுந்ததால் காரின் மேற்பகுதி சேதமானது. மேலும் மின்சார கம்பியின் மீதும் மரக்கிளைகள் விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனிடையே சாலையின் குறுக்கே உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ரூபி.காமராஜ்







