முக்கியச் செய்திகள்

தாழ்தள பேருந்துக்கான டெண்டர்: போக்குவரத்துத் துறை கோரிக்கை

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை துவங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை, உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்
திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என
கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல்
செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட
சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய
பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட பதில் மனுவில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள்
கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம்,
நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு
அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பேருந்துகள் கொள்முதல்
செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் 242 பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள்
அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்ய உள்ளதாகவும், இது மொத்த கொள்முதலில் 37 சதவீதம் எனவும் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு பரிந்துரைப்படி சென்னையில் உள்ள 956 பேருந்து நிறுத்தங்கள்
மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்வது
தொடர்பான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆறு மாதங்களில் பேருந்துகள்
முழுமையாக கொள்முதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து
வருவதாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடி உள்ளபோதும், இந்த
பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் இந்த டெண்டர் நடவடிக்கைகளை துவங்க
அனுமதியளிக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மருத்துவர்கள் போராட்டம்; டெல்லி போலீசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

Halley Karthik

தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாக பாழ்பட்டு போயுள்ளது: மு.க.ஸ்டாலின்

Halley Karthik

பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா; ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை

G SaravanaKumar