தமிழ்நாடு முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்- டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு விசாரணை சர்ச்சையில் சிக்கிய 3 டிஎஸ்பிக்களுக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் 76…

தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு விசாரணை சர்ச்சையில் சிக்கிய 3 டிஎஸ்பிக்களுக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டிஎஸ்பிக்கள் கண்ணன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மணிமுத்தாறு உதவி கமாண்டண்ட், சம்பத் ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சுரேஷ் ராமநாதபுரம் சரகர் போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக சுந்தரம் யமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக ரித்து உள்ளிட்ட 76 டிஎஸ்பிக்களை அதிரடியாக மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணி மாற்றம் செய்யப்பட்ட 76 டிஎஸ்பிக்களில் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.