சேலம், திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு: முழு விவரம்!

சேலம் மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெறும் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் சேவையில் மாற்றம்…

சேலம் மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களில் ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்கள்;

முழுமையாக ரத்து

கன்னியாகுமரி – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து

1. மதுரை – கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகிற மே 1 முதல் 5 வரையிலும், மே 9 முதல் 15 வரையிலும் போத்தனூர் – கோவை இடையே பகுதியாக ரத்து. அதேபோல மே 6 முதல் 8 வரை பொள்ளாச்சி – கோவை இடையே பகுதியாக ரத்து.

2. மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகிற மே 5,7,12 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை – கும்பகோணம் இடையே பகுதியாக ரத்து.

3. சென்னை எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகிற மே 24 அன்று சாலக்குடி – குருவாயூர் இடையே பகுதியாக ரத்து.

4. ஹவுரா – கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகிற ஜூன் 6 ஆம் தேதி வள்ளியூர் – கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து.

5. தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 6 ஆம் தேதி நெல்லை – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து.

6. நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி நாகர்கோவில் – நெல்லை இடையே பகுதியாக ரத்து.

7. நாகர்கோவில் – கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி நாகர்கோவில் – வள்ளியூர் இடையே பகுதியாக ரத்து.

8. திருவனந்தபுரம் – திருச்சி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி திருவனந்தபுரம் – நெல்லை இடையே பகுதியாக ரத்து.

9. திருச்சி – திருவனந்தபுரம் இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி நெல்லை – திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து.

ரயில் சேவையில் மாற்றம்

நெல்லை – பிசால்பூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.