கேரள மாநிலம் திருச்சூரில் கார் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கார்கள் முழுமையாக எரிந்தன.
கேரளா மாநிலம் திருச்சூர் குட்டநெல்லூரில் பிரபல நிறுவனத்தின் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த கார் ஷோரூமை ஒட்டி இதே நிறுவனத்தின் கார் சர்வீஸ் சென்டரும் இயங்கி வருகிறது. இன்று காலை 6 மணியளவில் கார் சர்வீஸ் சென்டரின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. ஆயில் மற்றும் உதிரி பாகங்கள் இருந்ததால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் ஷோரூமில் இருந்த 6 கார்களை பத்திரமாக மீட்கப்பட்டன. இருப்பினும் தீ வேகமாக பரவியதில் 3 கார்கள் மட்டும் தீயில் முழுமையாக எரிந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








