இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படமான ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளை முன்னிறுத்தி இயங்குவதே தங்கர்பச்சானின் திரைமொழி வழக்கம். அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை போன்ற காலங்கள் கடந்தும் ரசிக்கப்படும் படியான, உணர்வுபூர்வமான படங்களை இயக்கிய இவர் தற்போது அதே பாணியில், சிறுகதை ஒன்றை தழுவி, புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கியுள்ள படத்துக்கு “கருமேகங்கள் கலைகின்றன’ என்றும் பெயரிட்டுள்ளார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், ‘அருவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் பெற்ற நடிகை அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தங்கர்பச்சானுடன் முதன்முறையாக கைகோர்த்துள்ள ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி ஜனவரி 14ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் , இயக்குனர் பாரதிராஜா மற்றும் படத்தை இயக்கிய தங்கர் பச்சான் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி வெளியிட்டனர்.
Ulaga Nayagan Dr. @ikamalhaasan reveals the first look of Director @thankarbachan's #KarumegangalKalaiginrana. @offBharathiraja @menongautham #DVeeraSakthi @iYogiBabu @AditiBalan @gvprakash #BLenin @Vairamuthu @eka_dop @VAU_Media @johnsoncinepro#கருமேகங்கள்கலைகின்றன pic.twitter.com/1Bk1jqqCT4
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) March 6, 2023
ஜூன் 18 ஆம் தேதி அன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியான நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்று, படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தந்தை பாரதி ராஜா – மகன் கெளதம் மேனன் இடையே உள்ள பாசம், கோவம், வெறுப்பு… போன்ற எமோஷனை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் செப்-1ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








