பிரபாஸின் ’ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் மே மாதம் 9 ஆம் தேதியும், ஜூன் 16 ஆம் தேதி திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
ஆதிபுருஷ், தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
https://twitter.com/UV_Creations/status/1654675199273635841
யுவி க்ரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஆதிபுருஷ்’ படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அதில் இப்படத்தின் ட்ரெய்லர் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்றும், திரையரங்குகளில் இப்படம் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக ஆதிபுருஷ் அப்டேட்டுக்காக காத்திருந்த பிரபாஸின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.







