சூர்யாவின் ‘சீன்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது!

நடிகர் சூர்யாவின் ‘சீன்’ படத்தின் ட்ரெய்லர் இன்றூ மாலை 7:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தை ​’ஆவேஷம்’, ‘ரோமாஞ்சம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். ஜித்து மாதவன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இத்திரைப்படத்தில், சூர்யா ‘DSP இம்பராஜ்’ என்ற அதிரடியான மற்றும் சுவாரஸ்யமான காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென் (ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில்), ஆனந்த்ராஜ் மற்றும் லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்குகிறார்.

​ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் மூலமாக ‘U/A’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. மேலும், இப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு பிந்தைய டிஜிட்டல் ஓடிடி (OTT) உரிமத்தை பிரபல நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தகது.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 31, 2026) சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று மாலை 7:30 மணிக்கு அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் வெளியிடப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.