சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமியின் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
86 வயதாக டிராஃபிக் ராசமாமி, அவரது போராட்டங்களுக்காக அறியப்படுபவர். அரசியல் கட்சியினர் சாலைகளில் அனுமதியின்றி வைக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என்ற விஷயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர் வெற்றியும் பெற்றார். மேலும் அவர் பல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி அவருக்கு உடல் நலக்குறைவால் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது மேலும் உடல்நிலை மோசமானதால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையின் பொது சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.