டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 26ஆம் தேதி திமுக சார்பில் டிராக்டர் பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தவுள்ளனர். இதற்காக இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக சார்பில் டிராக்டர் பேரணி நடைபெறும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் மே தினப் பூங்காவில் இருந்து டிராக்டர் பேரணி புறப்படும் எனவும் இந்த பேரணியில், திமுக விவசாய அணியினர் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement: