டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி காலமானார்!

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (79) உடல்நலக் குறைவால் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி.யின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு (79) உடல்நலக்குறைவால் காலமானார்.

நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்துள்ளர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவியின் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.