உதகையில் படகு சவாரி செய்ய குவிந்த சுற்றுலா பயணிகள்!

உதகையில் முக்கிய சுற்றுலா தலமான படகு இல்லத்தில் அதிக அளவில் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்…

உதகையில் முக்கிய சுற்றுலா தலமான படகு இல்லத்தில் அதிக அளவில் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் உதகைக்கு வருகை புரிகின்றனர்.

விடுமுறை நாளான நேற்று உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதல் குவிந்து வரிசையில் காத்து நின்று இயந்திரப் படகு, மிதவை படகு, துடுப்பு படகு உள்ளிட்டவைகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். சவாரி செய்த மக்கள் அனைவரும் செல்ஃபி எடுத்தும், உதகையில் குளு, குளு காலநிலையை அனுபவித்து விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

—அனகா காளமேகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.