பர்வானூ பகுதியில் கேபிள் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் ஒன்றரை மணி நேரம் தவித்த சுற்றுலாபயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று பர்வானூ. இந்நகரில் உள்ள டிம்பர் டிரெயில் பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுற்றுலாவாசிகள் செல்வதற்கு வசதியாக கேபிள் கார் சேவை பயன்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வழக்கம் போல் இன்றும் கேபிள் கார் வசதியை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் மலைபிரதேச அழகை ரசித்து கொண்டு பயணித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேபிள் கார் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதி வழியில் நின்றது. இதில், 2 முதியவர்கள், 4 பெண்கள் உள்பட 11-க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் சென்ற கேபிள் கார் திடீரென பல நூறு அடி உயரத்தில் நடுவழியில் நின்றது. அவர்கள் அனைவரையும் போலீசார் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து எஸ்பி வீரேந்தர் ஷர்மா கூறுகையில், பர்வானூ மலை பிரதேசத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் கேபிள் காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணமாக நடுவழியில் சிக்கி கொண்டனர். டிம்பெர் டிரெயிலை சேர்ந்த தொழில்நுட்ப குழுவிர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர் என கூறினார்.
இதுபற்றி பர்வானூ டிஎஸ்பி பிரணவ் சவுகான் கூறும்போது, கேபிள் காரில் திடீரென ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஒன்றரை மணிநேரம் நடுவழியில் நின்று விட்டது. கயிறு கட்டி கேபிள் காரில் இருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கி பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர். வரும் காலங்களில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்