தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விற்பனை செய்வதற்கு வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தெரிவித்து தூத்துக்குடியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் விளைவாக கடந்த 2008ம் ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அப்போதைய அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இன்று வேதாந்தா நிறுவனம் சார்பில் தினசரி பத்திரிக்கைகளில் விளம்பரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடியில் அமைந்துள்ள நவீன ஸ்மெல்டர் அண்ட் ரீஃபைனிங் காம்ப்ளக்ஸ் விற்பனை என்ற பெயரில் இந்த விளம்பரம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் உலகம் தரம் வாய்ந்த மற்றும் கழிவுகளை வெளியேற்றாத தொழிற்சாலை ஆகும். உலகில் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட இந்த காப்பர் ஸ்மெல்டர் மற்றும் ரிஃபைனரி காம்ப்ளக்ஸ் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை வரவேற்றுள்ள வேதாந்தா நிறுவனம் வருகிற ஜூலை 4ம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறு வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.