குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம்,  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்…

தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம்,  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.  அதனை தொடர்ந்து,  சுற்றுலா பயணிகள் குளிக்க குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தடை விதிக்கப்பட்டிருந்தது.   இந்த நிலையில்,  தண்ணீர் வரத்து தற்போது சீரானதை தொடர்ந்து குற்றால அருவிகளில் ஓரமாக நின்று குளிக்க சுற்றுலா பணிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தற்போது சுற்றுலா பணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் தற்போது அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.  மேலும், எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகளின் கூட்டமானது அருவிகளில் இல்லாததால் குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.