இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள்

இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள் பற்றியும் அவர்களுடைய சாதனைகளையும் பார்ப்போம்.  1. நடாஷா பூனாவாலா – சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா – செயல் இயக்குநர்:  இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை…

இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள் பற்றியும் அவர்களுடைய சாதனைகளையும் பார்ப்போம். 
1. நடாஷா பூனாவாலா – சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா – செயல் இயக்குநர்: 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் முக்கிய நிறுவனம். உலகின் முன்னணி தடுப்பூசி  தயாரிக்கும் நிறுவனங்களில் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவும் ஒன்று .இந்நிறுவனத்தின் செயல் இயக்குநரான நடாஷா, வர்த்தக திட்ட வகுப்பாளராக செயல்படுகிறார் .  2. கிரண் மசூம்தார் – தலைவர்,  நிர்வாக இயக்குநர் – பயோகான் லிமிடெட்: 

பயோகான் நிறுவனத்தை, உயிரி தொழில்நுட்பவியலில் உலக தரத்திற்கு தனது திறமையால் கொண்டு சென்றவர். பிரபல Time இதழ் வெளியிட்ட உலகின்  செல்வாக்கு மிக்க 100 பேரில் இவரும் ஒருவர்.
3. மருத்துவர் சுவாதி பிராமல் – துணைத் தலைவர் – பிராமல் எண்டர்பிரைசஸ் (PIRAMAL ENTERPRISES) 
மருத்துவர் சுவாதி பிராமல் மருந்து துறை  ஆராய்ச்சியில் தலைசிறந்த விஞ்ஞானி. மருந்து துறையின் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாமானியர்களின் உடல்நலனையும், சுகாதாரத்தையும் பேணி காத்ததில் இவருக்கு முக்கிய பங்குண்டு.
4. சமினா ஹமித் – செயலாக்க துணை தலைவர் – சிப்லா (Cipla) நிறுவனம்
சமினா ஹமித்தின்  திறனாலும், வர்த்தக நுணுக்கத்தாலும்  சிப்லா நிறுவனத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது.  ஏற்கனவே மருந்து துறையில் சாதனை படைத்து வரும் சிப்லா நிறுவனம்,  மக்களின் நம்பிக்கைக்கு  ஊறு விளைவிக்காமல் அந்நிறுவனத்தை அசுர பாய்ச்சலுக்கு  நகர்த்தியது இவரது சிறப்பு . 
5. மருத்துவர் ப்ரீத்தா ரெட்டி – அப்போலோ மருத்துவமனை(Apollo Hospitals)  

செல்போன் மூலம் மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் மருத்துவத்தை கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியவர் . உயிர் காக்கும் உயர் சிகிச்சை மூலம் பல கோடி இந்தியர்களை காப்பாற்றிய  அப்போலோ மருத்துவமனையின் (Apollo Hospitals) பெருமைக்கு சொந்தக்காரர் .

6.வினிதா குப்தா – முதன்மை செயல் அதிகாரி – லூப்பின் பார்மசியூட்டிகல்ஸ் (Lupin Pharmaceuticals) 
 
அமெரிக்காவின் மூலக்கூறு மருந்து துறையின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய மருந்து நிறுவனம் வினிதா குப்தாவின் லூப்பின் பார்மாகியூட்டிக்கல்ஸ் நிறுவனம். இதற்காக  வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு வழங்கப்படும் IBM  விருதினை வென்றவர்.
7. ரேஷ்மா கேவல்ரமணி – முதன்மை செயல் அதிகாரி – வெர்ட்டெக்ஸ் பார்மசியூட்டிகல்ஸ்: 
அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனத்தின் முதல் பெண், முதன்மை செயல் அதிகாரியாக  ரேஷ்மா கேவல்ரமணி நியமிக்கப்பட்டிருக்கிறார்.  வர்த்தகம் மற்றும் உயிரி தொழில் நுட்பவியலில் தலைசிறந்தவராக விளங்கும் இவர்,  Tie Boston Healthcare Leadership  விருதுக்கும் Boston வர்த்தக ஆய்வின் அதிகாரமிக்க 50 பேரில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
8.நமிதா தாபர் – முதன்மை இயக்குநர் – எம்கியூர் பார்மசியூட்டிகல்ஸ்: 
நமிதா தாபர்  பெண்களின் பிரத்யேக பிரச்னைகளான ரத்தசோகை, மாதவிடாய் சிக்கல் உள்ளிட்டவற்றிற்காக தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை  அவரது நிறுவனம் மூலம் மேற்கொண்டவர். எம்கியூர் பார்மசியூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக தற்போது செயலாற்றி வருகிறார்.
9.காஞ்சனா – ஒருங்கிணைந்த மருத்துவ தீர்வு  அதிகாரி – நோவார்ட்டிஸ் மருத்துவமனை
இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் இயக்குநரான இவர்,  தற்போது அனைத்து நோய்களுக்குமான ஒருங்கிணைந்த தீர்வினை எட்டக் கூடிய ஆய்வுகளை மேற்கொள்ளும்  முதன்மை அதிகாரியாக பணியாற்றுகிறார் .
10.சந்தியா வைஷ்யா – முதன்மை செயல் அதிகாரி – பயோட்ரிக் பார்மா
மொத்த வர்த்தக மருந்து நிறுவனமான பயோட்ரிக் பார்மாவை, பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதோடு முன்னணி சர்வதேச மருந்து நிறுவனங்களோடும் போட்டி போட வைத்தவர் சந்தியா வைஷ்யா . இதற்கு பலனாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பெண்களுக்கான தொழில் முனைவோர் விருதினை பெற்றுள்ளார்.
இயற்கையில், பெண்களின் இயல்பான உயிராக்கத்தில் தொடங்கி, கல்வி வளர்ச்சியின் உதவியோடு  உயிர் காக்கும் துறையிலும், முக்கிய பொறுப்புகளில் பெண்கள் சிறந்து இவர்கள், முன்னேறத்துடிக்கும்  மகளிர் சக்திக்கு உதாரணமாக மாறியுள்ளனர்.
  • சுகிதா சாரங்கராஜ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.