”டாப் ஆர்டர் வீரர்கள் பெரும் கவலையாக உள்ளனர்” – அபிநவ் முகுந்த்

கேப்டவுன் எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரும் கவலையாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த் தெரிவித்துள்ளார். எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில்…

கேப்டவுன் எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரும் கவலையாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிராக மீண்டும் ஒரு முறை ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட தவறினர். இதனால் தொடர்ச்சியாக 2வது முறையாக அந்த அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இதுவரை விளையாடி உள்ள 3 ஆட்டங்களிலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கிடம் இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படவில்லை. பவர்பிளேவில் 3 முதல் 4 விக்கெட்களை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் இரு ஆட்டத்திலும் பவர்பிளேவில் 4 விக்கெட்களை பறிகொடுத்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிராக 3 விக்கெட்களை இழந்தது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிராக ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜார்ஜ் லிண்டே, ரபாடா, ரஷித் கான், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வாக்கர், டு பிளெஸ்ஸிஸ் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்

இதையடுத்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் குறித்து கவலை தெரிவித்த கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அபிநவ் முகுந்த், ”ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தத் தொடரில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழக்கிறார்கள். டாப் ஆர்டர் வீரர்கள் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் கவலையாக உள்ளனர். கடந்த 3 ஆட்டங்களிலும் அவர்கள் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறி உள்ளனர்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.