26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

தொலைந்துபோன சூட்கேஸ் ? 4 ஆண்டுகளுக்கு பின் அதிர்ச்சி தந்த விமான நிறுவனம்

விமான நிலையங்களில் லக்கேஜ் காணாமல் போவது வழக்கமான ஒன்று தான். சில நேரங்களில் தொலைத்தவர்கள் அதை சில நாட்களில் திரும்பப் பெறுவார்கள், ஆனால் சில நேரங்களில் அது திரும்பப் கிடைக்காமலேயே மிக பெரிய மனகஷ்டத்தை அவர்களுக்கு கொடுப்பதும் உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தற்போது ஒரு வினோதமான சம்பவம் அமெரிக்க பெண்மணி ஒருவருக்கு நடந்துள்ளது. அது என்னவெனில், அவர் விமானநிலையத்தில் தொலைத்த சூட்கேஸை நான்காண்டுகளுக்கு பின் அவர் பயணித்த விமான நிறுவனம் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்த சம்பவம் தான்.

ஓரிகானில் வசித்து வருபவர் ஏப்ரல் கவின். இவர் ஒரு வணிகப் பயணத்திற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிகாகோவுக்குச் சென்றுள்ளார். அந்த சமயம் அவரது வீட்டிற்குத் அவர் திரும்பி வரும்போது, ​​யுனைடெட் ஏர்லைன்சின் அலட்சியதால் அவரது சாமான்கள் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பின் பல மாதங்கள் தேடுதலுக்குப் பிறகு, பை காணாமல் போனது மர்மமாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்ததாக கவின் கூறியதோடு, அவர் இழந்த சில பொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் தனது சமூக வலைதள பக்கமான TikTok இல் அவ்வப்போது தொலைந்த பொருள் குறித்த அப்டேடினை வீடியோவாக வெளியிட்டு வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹூஸ்டனில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இருந்து கவினுக்கு போன் கால் வர அதில் அவர் தொலைத்த லக்கேஜ்கள் கிடைத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தியை கேட்ட ஏப்ரல் கவின் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து இது சம்மந்தமாக அவரது TikTok பதிவில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் “திடீரென்று, டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அவர்கள் எனது சாமான்களைக் கண்டுபிடித்து விட்டார்கள் என சொன்னபோது , நான் குழப்பமடைந்தேன். நான்கு ஆண்டுகளாக ஒரே ஒரு எழுத்துப்பிழையால் தான் எனது லக்கேஜ்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை”.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள பை சிறிது சேதமடைந்து தேய்ந்துவிட்டதாகவும், ஆனால் அதில் உள்ள பொருட்கள் அப்படியே இருந்ததாகவும் கூறினர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் எனது எல்லா விஷயங்களையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வகையில் .” இந்த சூட்கேஸ் நான்கு வருடங்களாகப் பயணித்து, ஹோண்டுராஸுக்குச் சென்று, இறுதியாக என்னிடம் திரும்பி வந்ததை என்னால் மறக்கவே முடியாது எனவும் “இந்த எதிரிபார்ப்பை நிறைவேற்றி கொடுத்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

கேன்ஸ் 2023 – மினுமினுக்கும் உடையில் கலந்துகொண்ட நடிகை டயானா!!

Jeni

டிஜிட்டலில் உருவாகிறது எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’!

Halley Karthik

எஸ்.சி / எஸ்.டி க்கான டெண்டர்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

Web Editor