துபாயிலிருந்து சூட்கேஸில் வந்த தக்காளி!! தாயின் கோரிக்கையை நிறைவேற்றிய பெண்!!

துபாயிலிருந்து என்ன வாங்கி வரவேண்டும் என கேட்ட மகளிடம் தக்காளி வாங்கி வா எனக்  தாய் கூறியதால், 10 கிலோ தக்காளியை சூட்கேஸில் மகள் அனுப்பி வைத்த நிகழ்வு நடந்தேரியுள்ளது.  நாடு முழுவதும் தக்காளி…

துபாயிலிருந்து என்ன வாங்கி வரவேண்டும் என கேட்ட மகளிடம் தக்காளி வாங்கி வா எனக்  தாய் கூறியதால், 10 கிலோ தக்காளியை சூட்கேஸில் மகள் அனுப்பி வைத்த நிகழ்வு நடந்தேரியுள்ளது. 

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை உயர்வால் சில உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளில் இனி தக்காளியை பயன்படுத்தமாட்டோம் என அறிவிக்கும் அளவிற்கு விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.

குறிப்பாக தேசிய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ₹108 ஆக இருப்பதாக நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தக்களியின் விலை டெல்லியில் ரூ.150, லக்னோவில் ரூ.143, சென்னையில் ரூ.123 என அனைத்து பகுதிகளிலும் விலை கடுமையாக உயர்ந்தது. தமிழகத்தில் தற்போதும் தக்களி விலை ரூ.100-க்கு மேல் தான் விற்கப்படுகிறது.

இந்நிலையில் தக்காளியை மையப்படுத்தி நாடு முழுவதும் ஆங்காங்கே சுவாரஷ்யமான நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.  அதனை தொடர்ந்து மற்றொரு நிகழ்வு தற்போது நடந்தேரியுள்ளது.

கோடை விடுமுறைக்காக துபாயிலிருந்து இந்தியா வர நினைத்த பெண், தனது அம்மாவிடம் என்ன வாங்கி வர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த தாய் 10 கிலோ தக்காளி கேட்டிருக்கிறார். இதனால் துபாயி இருந்து 10 கிலோ தக்களியை அந்த பெண் சூட்கேஸில் அனுப்பியிருக்கிறார். இது சம்பவம் குறித்து தக்காளியை துபாயில் இருந்து அனுப்பியவரின் சகோதரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

https://twitter.com/Full_Meals/status/1681222560674095104?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1681222560674095104%7Ctwgr%5Edf5ff9d0373919d583d2d59cb2eafe7508902a40%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fmom-asks-daughter-in-dubai-to-gift-her-10-kg-tomatoes-101690027356186.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.