திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசன கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.500-ஆக உயர்வு! அதிரடி கட்டண உயர்வால் பக்தர்கள் அதிர்ச்சி!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசன கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.500-ஆக உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பக்தி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசன கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.500-ஆக உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பக்தி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு செல்கின்றனர். அதிலும் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிகின்றனர்.

இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்த்து குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய வைப்பதாக பக்தர்களிடம் சில இடைத்தரகர்கள் ஈடுபடுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது தொடர்கதையாகி உள்ளது. இதனால் கட்டணம் செலுத்தி வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

ஏற்கனவே கோயில் நிர்வாகம் கட்டண தரிசனத்திற்கு ரூ.50 கட்டணம் வசூலித்து வந்தது. இந்நிலையில் தற்போது முன்னறிவிப்பு ஏதும் இன்றி சுவாமி காணிக்கை வரவு என நபர் ஒருவருக்கு ரூ.500 விதம் வசூலிக்கப்படுகிறது. முறையான அறிவிப்பு ஏதும் இல்லாமல் தடாலடியாக கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.