31 C
Chennai
December 5, 2023
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட பெண் – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மர்ம நபர்களால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்தவர் ராஜி (எ) ராஜேஸ்வரி (35). இவர் சென்னை மின்சார ரயிலில் பழம் மற்றும் சமோசா வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு சுமார் 8 மணி அளவில் ராஜேஸ்வரி எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் சமோசா வியாபாரம் செய்துள்ளார்.  சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி இறங்கியபோது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஸ்வரி மயங்கி சரிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து அங்கு சென்ற ரயில்வே போலீசார், ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலிய உதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு ஒரு மணி அளவில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக  ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரிக்கு மூன்று கணவர்கள் உள்ளதாகவும், எனவே குடும்ப பிரச்சனை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy