மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரமேஷ் பொவார் மீண்டும் நியமனம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரமேஷ் பொவார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பொவார். மும்பையை சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டி மற்றும்…

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரமேஷ் பொவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பொவார். மும்பையை சேர்ந்த இவர், இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டி மற்றும் 31 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய பிறகு, பயிற்சியாளர் ஆனார்.

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு இருந்தார். மகளிர் உலகக் கோப்பை போட்டியின்போது, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜுக்கும் பொவாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதை மிதாலி ராஜ் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

பொவாரும், மிதாலி தன்னை மிரட்டுவதாகப் புகார் கூறியிருந்தார். இதையடுத்து பொவாரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. ஆனால், இளம் வீராங்கனைகளான ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா ஆகியோர் ரமேஷ் பொவாரின் பயிற்சியாளர் பதவியை நீட்டிக்க வேண்டும் என்று அப்போது கூறியிருந்தனர்.

பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த டபிள்யூ வி.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் கோரியிருந்தது. விண்ணப்பித்திருந்தவர்களிடம் நடத்திய நேர்காணலை அடுத்து, ரமேஷ் பொவார் புதிய தலைமை பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள் ளார்.

புதிய பயிற்சியாளராகியுள்ள ரமேஷ் பொவாருக்கு டபிள்யூவி ராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.