ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது.
கொரோனா காரணமாக, கடந்த வருடம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், ஓர் ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. 32-வது ஒலிம்பிக் போட்டியான இது, இன்று (23-07-201) மாலை கோலாகலமாக தொடங்கியது. கொரோனா காரணமாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வரும் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி 6 அதிகாரிகள் மட்டுமே தொடக்க விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால் வீரர், வீராங்கனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்தியா சார்பில் 6 அதிகாரிகளும் 19 வீரர், வீராங்கனைகளும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.
ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் சென்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் அதிகபட்ச வீரர், வீராங்கனைகள் இவர்கள். மொத்தம் 18 போட்டிகளில் நம் வீரர்கள் பங்கேற்கிறார் கள். இதில், துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மின்டன், வில்வித்தை, ஹாக்கி போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
மொத்தமாக, 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 க்கும் அதிகமான வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர். கொரோனா காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. தொடக்கவிழா விலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தொடக்க விழாவில் ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றன. பின்னர் ஜப்பான் நாட்டு கொடி ஏற்றப்பட்டது.
இதுவரை இல்லாத அளவாக, நாடுகளின் கொடிகளை ஏந்தி செல்வதற்கு இம்முறை இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில், குத்துச்சண்டை வீராங் கனை மேரி கோம், ஹாக்கி அணி வீரர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏந்தி செல்கின்றனர்.
தொடக்க விழா அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு செல்கிறது.